Tuesday, July 21, 2009

அன்றோரு மாலை....

அன்றோரு மாலை இளம் வெயில் நேரம்...
என்னோடு அவளும் இருந்த காலம்
மனதில் அணுகுண்டு வெடிச்ச தருணம்
தென்றல் வந்து என்னை வருடியதே....

என்னோடு அவளும் பேசிய கணமே
மனதில் இயற்கை ஆசி தருமே
மீண்டும் அவளை பார்க்கும் வரமே
வேண்டும் என மனதும் ஏங்கியதே..

அவளை பிரியும் நேரம் வருமே
கண்கள் தானாய் மெல்ல கலங்கும்
அவளை பிரியும் ஒவ்வொரு நொடியும்
உயிரும் மெல்ல உருகி வடிகிறதே....

அவளுடன் சேரும் நேரம் வருமே
தொலைவில் இல்லை கண்களில் தெரியும்.
அந்த நேரம் வருகிற வரையில்
உனக்கென காத்திருப்பேன்....