Thursday, May 24, 2012

மலர்ந்தும் மலரா மலர் போலே!!!


உள்ளுக்குள் ஆயிரம் கனவுகள் ஏந்தி நின்ற,
உன் விழிகளில் ஒய்யாரமாய், ஒரு ஓரமாய் நானின்ற நொடிகளில்..
இளங்காற்று வீசி தேகம் சிலிர்க்க வைத்த நேரத்தில்,
தூரத்தில் பசுமையாய் தெரிந்தது வாழ்க்கை...உன் வரவாள்...

கள்ளமில்லா சிரிப்பு, மயக்க வைக்கும் பார்வை..
நீ அதிர வைக்கும் பாவை...
என் தேசத்து மலரெல்லாம் சொல்லுதே உன் நாமம் என் செவியுணர...
எங்கே சென்றேனும் தொடருதே உன் ஞாபகம்...
மனதில் பிணியாய் அழிவில்லா வேதனை...

அந்தி மாலை வேளை, சற்றென்று மாறிய வானிலை..
பண்ணீர் தெளித்தது மேகம்...மழையில் கரைந்ததென் தேகம்...
வாசல் பார்த்து நின்றேன் உன் வரவுக்காக,
மனவாசல் மூடி வைத்தேன் ; அது உனக்காக...

எம்மொழியில் சில வரிகள்-கண்ணில் சில துளிகள் : இது காதல் தானா?

சலங்கை குளுங்கும் பேச்சாலே!
மின்னல் வெட்டு சிரிப்பாலே!
மலர்ந்தும் மலரா மலர் போலே!
என் நெஞ்சைத் தொட்டுப் போனது யார்?

விரிந்த வானம், ஓடும் நதி, மலர்ந்த சூரியன் வீசும் தென்றல்,
என் நாசிக் கவர்ந்த சோலை என..
இயற்கை மடியில் தவழ்ந்த என்னை,
மங்கை மடி இழுத்தது யார்???

தென்றல் அணைக்க
தாயவள் தாலாட்டி ஈன்றவன் தலைக்கோத
சுகமாய் நித்திரைக் கொண்ட நொடிகள் எங்கே போனது?
அவளைக் கண்டதும் கண்கள் விரதம் பூண்டது...
ஏனோ உறங்க மறுக்குது!!!

சொல்லோடு விளையாட்டு தமிழில் தாலாட்டு
இதமாய் ஒரு பாட்டு செவியில் அதைக் கேட்டு
மகிழ்ந்த தருணங்கள் எங்கே?

தோழன் தோள் பற்றி
கதைகள் யாம் உரைக்க,
சிதரிய சில்லரையாய் சிரிப்புகள் உதிர்ந்த வசந்தக் காலம் எங்கே?

தனிமையில் நானிருக்க,
உள்ளத்தின் வலிதன்னை
பேனா மைச்சுமக்க காகிதம் பாரமானது...
இன்று மீண்டும் கையில் கோலெடுக்க
வலியில் உதிர்ந்தது வரிகள் ; அருகில் அவளில்லை...
சிலுவையில் அரைந்த இயேசுவாய் ஞாபகங்கள் என் நெஞ்சில்...

Saturday, May 12, 2012

அம்மா


உடலை ஏனோ நீ வறுத்தினாய்,
உயிரை உருக்கி சுவாசமாய் ஊட்டினாய்,                      பாசமாய் தலை நீ கோதினாய்,
பசித்திட அமிர்தம் வழங்கினாய்..                                                              

விழிகளில் வழிந்திடும் துளிகளைச்
சேலை நுனியில் நீ விழக்கினாய்...                                 சோகம் என்னை அணைக்கையில்,
அன்னையே!!
உந்தன் மடித் தேடும் என் மனம்...                                                                                                                 
எந்தன் கடமைகள் ஆயிரம்,
என் கடன்கள் போக்க வேண்டுமே..
உணர்ந்தேன் இன்று அன்னையே!!
என் உருவே நீ தந்த வரம் தானம்மா....
                                              உந்தன் கரம்களில் ஏந்தியே!!               மண்ணைக் கண்ட மழலை நான்...
இனி உன்னைச் சுமக்க வேண்டுமே!!!                           நான் வாழும் காலம் மட்டுமே!!!
இது வரமாய் எனக்கு வேண்டுமே....

விழித் தூக்கம் இழந்தாய் என்னாலே...
உன் கண்கள் கசிந்ததும் என்னாலே...
இனி கலங்க வேண்டாம் என் தாயே...
உன்னைக் காப்பேன் என் சேய் போலே!!!!

Friday, September 23, 2011

மங்கையவள்

விடியல் ஏந்திய வானாய் - பெண் தேகம்,
வின்மீன் சூடிய இரவாய் - மலர் சூடிய கூந்தல்,
துயில் கலைந்த ஆதவன் - நெத்தியில் சிறுப் பொட்டு,
வைகை நதியில் கரும் மீன் - கதகலியாடும் விழிகள்,
ஆழ்கடல் செதுக்கிய முத்துகள் - பலிச்சிடும் அழகுப் பற்கள்,
செம்புரிச் சங்கே உறுப்பாய் ஆனதோ! - கூந்தல் மறைவில் செவிகள்,
செடியில் பூத்தப் பூக்கள் - கரங்களில் உதித்த விரல்கள்,
பூக்களில் மலர்ந்தது பனித்துளிகள் - விரல்களில் அங்கு நகங்கள்,
அன்னம் நடந்த நடை - மண்ணில் பதிந்த கால் தடங்கள்,
காற்றில் தவழ்ந்த ராகங்கள் - திருவாய் உதிர்த்த செம்மொழியோ,
காவியம் எழுத வேண்டுமோ - இவளே பொருளாய் போதுமே...

Saturday, February 5, 2011

♥♥காதல்♥♥

வேதியன் ஆன பரம்பொருளின் இனம்!!!
உயிரினம் வாழ வழிவகுக்கும் உணர்வு!
மேன்மை பெற்று மானுடம் கையில் சிக்கிய பொக்கிஷம்....
கண்கள் பிரசவிக்கும் வலியான குழந்தை இந்தக் காதல்....

கண்களின் கரும்பாதையில் தொடங்கி...
உன் ஒவ்வொரு அணுக்களுக்கும் விலாசம் தரும் தபால்காரன்...
கண்கள் எனும் வழியில்,
நெஞ்சுக் குழியில்,
இதயம் எனும் சமவெளியில்...
வறண்ட மனதிலும் கள்ளிப் பூவாய் பூக்குமே இக்காதல்....

மூவாறு வயதில் அழையா நண்பனவன்...
நீ தடுத்தாலும்,
எட்டி உதைத்தாலும்,
இடம் தர மறுத்தாலும்
கண்கள் எனும் திண்ணையில் ஒய்யாரமாய் கண்ணுரங்கும்...
நீ கண்ணயரும் நேரத்தில் உன் நெஞ்சில் குடிபுகுமே இக்காதல்...

நம்பிக்கையின் விருட்சம் தான் காதல்..
இன்று துளிர்த்து, நாளை மொட்டவிழ்ந்து பிறகு வதங்குவதற்கு காதல்,
பூந்தோட்டமல்ல...நம் மனதின் தூங்காநகரம்...
உன் சரிரம் மண்ணில் சரியும் பொழுதும்
கம்பிரமாய் நிற்குமடா நீ எழுப்பிய காதல் கோட்டை....

மனிதனின் செயல்கள் இருவகை..
ஒன்று வேகம் ; ஒன்று விவேகம்...
மனிதனின் வாழ்க்கையும் இருவகை..
ஒன்று களவு ; ஒன்று கற்பு...
கற்பில் வெல்ல நீ களவை வெல்ல வேண்டும்...
களவில் வெல்ல உனக்கு (வி)வேகம் வேண்டும்...

காதல் வேறு ; ஈர்ப்பு வேறு, அதை நீயரிய வேண்டும்...
கண்டறிந்த பின்னரே நீ காதல் செய்ய வேண்டும்...
உன் கைப்பற்றி,
உன் தோல்ச் சாய்ந்து,
உன் சுவாச வெப்பத்தில் குளிர்க் காயுமே உண்மைக் காதல்...

உன் எண்ணமாய் அவள்,
அவள் செயலாய் நீ...
ஆதிசிவன் அம்சமாய் மண்ணில் இக்காதல்......

Thursday, January 13, 2011

பாலைவனத்து பூறாக்கள்

போர்க் களத்தில் சில பூக்கள்..
சப்தத்தில் இன்றொரு நிசப்தம்...
ஒன்றாய் நடந்த போது செவிக்குப் புரியாத வார்த்தைகள்..
தனிமையில் இன்றுனக்கு விளங்கும்...செவிகள் கேட்க துடிக்கும்...

சிற்பிக்குள் முத்தைப் போல் நெஞ்சத்தில் எண்ணங்கள்...
சிற்பிகள் தானாய் திறப்பதில்லை...எண்ணங்களும் புரிவதில்லை...
ஊமையின் தோழி பெண் - பெண்கள் சொல்வதில்லை..
பித்தனின் நண்பன் ஆண் - ஆண்கள் நிலையிலில்லை...

ஒன்றாய் இருந்தும் தூரத்தில் அவன்...
அறிந்தும் புரியாமல் அவள்...
பாலைவனத்து புறாக்கள் அவர்கள்..
பிரிக்கும் கள்ளிச் செடிகள் அவர்களைச் சுற்றி...

தனிமையின் வாசலில் தன்னந்தனியே ஒருவன்...
வாழ்க்கையின் சூழ்ச்சியின் குழப்பத்தில் ஒருவள்..
வட்டம் போல் சிலவற்றிற்குத் தொடக்கமே முடிவாய்.....

Tuesday, December 7, 2010

மண்ணில் காதல்

மனிதனின் படைப்பு; இறைவன் வரைந்த சித்திரம்,
மனிதர்கள் பல வர்ணம், குணம், திறன், வடிவங்களை
கொண்டிருந்தாலும் உணர்வுகள் ஒன்றுதானே!!

வலித்தால் அழுவான்,
மகிழ்ந்தால் சிரிப்பான்,
காதலித்தால்?
அழுதுக் கொண்டே சிரிப்பான் மனிதன்...
மூளையில் இருபக்கம் போல்
காதலுக்கும் இன்பம், துன்பம் என இருபக்கம்.

அமைதியாய் இரு ஞானியாவாய்,
மகிழ்ச்சியாய் இரு இளமையாவாய்..
காதலித்திரு இளமையில் நீ ஞானியாவாய்.

வள்ளுவனின் காதல் காவியத்தில்
அமராவதியின் காதல் கல்லரையில்
மண்ணில் கரைந்தாலும் நினைவில் உயிர்
வாழ்வது காதல் மட்டுமே!!

நீர், நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம் போல்
காதலையும் கட்டுக்குள்,
அடைக்க முடியாது; அடக்கவும் முடியாது..
பிரபஞ்சத்தில் மறைந்து வாழும் ஆறாம் பூதம் காதல்தான்...

அணுவிலிருந்து உதித்தவன் மனிதன்,
எதிலிருந்து உதித்தது காதல்?
அன்பே சிவம் என்று கூறுவது இதைத்தானோ???

இறைவன்=காதல்

ம்ம்...இல்லை!! இல்லை!! நாத்திகன் இதை எதிர்ப்பானே!!
பிறகு காதலின் பிறப்பை எப்படி அறிவது; கூறுவது?
ஹொர்மோனின் சூழ்ச்சி என்கிறான் நாத்திகவாதி..
எது எப்படியோ காதல் உணர்வதற்கு மட்டுமே விமர்சிக்கப்படுவதற்கல்ல...

காதலின் அவதாரங்கள் பல..
ஆண் பெண் கொண்டது மட்டுமல்ல காதல்..
தகப்பன் மகன் உணர்விலும் வாழும் காதல்...
பெற்ற பந்தங்களை கடந்து
உற்ற நண்பன் வரை தொடரும்...

உறவுகள் என்றும் நம்மை தொடர்வதில்லை...
மனிதர்கள் மேல் நாம் கொண்ட அன்பே நம்மை கடைசி வரை
சூழ்ந்து வரும்..வாழும் காலத்தில் நீ மக்களின் மனதில்
விதைத்த அன்பின் விதையே!!
உன் கடைசி தருணத்தில் கண்ணீராய் சிந்தப்படும்....

Tuesday, June 22, 2010

இன்று உன் இறுதி நாள்!!!!

பூவும் மனிதனும் ஒன்றுதான்!
இன்று இறுதி நாள் என்று தெரிந்தால்
பூவும் வதங்கியே மலரும்...(மலருமா?)

மனிதா இன்று உன் இறுதி நாள்!!

காலையில் விழித்தவன் விழித்தவன் தான்..
உனை சூழ்ந்திருக்கும் வானம், காற்று, நீர், நெருப்பு, மண்
யாவும் சூன்யப்படும்.
புவியில் நீ மட்டும் தனிமை சிலுவை அரையப்படுவாய்!

பசித்தும் புசிக்க மறந்திருப்பாய்,
விழித்தே நீ உறங்கிருப்பாய்,
அருந்தும் சலமும் நஞ்ஜென உணர்ந்திருப்பாய்,
ஏன் சுவாசிக்கவே வெறுத்திருப்பாய்.

மனிதா இன்று உன் இறுதி நாள்!!

நண்பனும் அந்நியப்படுவான்,
உடன் பிறப்புகள் பெயர் மறப்பாய்,
தாய் தந்தையின் கைப்பிடி தளர்வதாய் உணர்வாய்!!!
அன்று மட்டும் வாழ்வை அதிகம் வெறுத்திருப்பாய்,
இன்னும் ஒருநாள் வாழத் துடித்திருப்பாய்...

மனிதா இன்று உன் இறுதி நாள்!!

ஆத்திகனா நீ நாத்திகன் ஆவாய்,
நாத்திகனா நீ ஆத்திகன் ஆவாய்.
கடவுள் அதிகமாக விமர்சிக்கப்படுவதும் அன்றுதான்...

நீ கண்ணிமைக்கும் கணங்களை எண்ணியிருப்பாய்,
உன் கண் மயிர் உதிர்வதையும் கணக்கெடுப்பாய்...
சிறு ஒசைக் கேட்டு அதிர்ந்திருப்பாய்
நித்தம் ஒரு கணம் இறந்திருப்பாய்....

மனிதா இன்று உன் இறுதி நாள்!!

இறப்பு உனக்கு இயல்புதான்
அந்த நாள் தெரியாதவரை.....