பூவும் மனிதனும் ஒன்றுதான்!
இன்று இறுதி நாள் என்று தெரிந்தால்
பூவும் வதங்கியே மலரும்...(மலருமா?)
மனிதா இன்று உன் இறுதி நாள்!!
காலையில் விழித்தவன் விழித்தவன் தான்..
உனை சூழ்ந்திருக்கும் வானம், காற்று, நீர், நெருப்பு, மண்
யாவும் சூன்யப்படும்.
புவியில் நீ மட்டும் தனிமை சிலுவை அரையப்படுவாய்!
பசித்தும் புசிக்க மறந்திருப்பாய்,
விழித்தே நீ உறங்கிருப்பாய்,
அருந்தும் சலமும் நஞ்ஜென உணர்ந்திருப்பாய்,
ஏன் சுவாசிக்கவே வெறுத்திருப்பாய்.
மனிதா இன்று உன் இறுதி நாள்!!
நண்பனும் அந்நியப்படுவான்,
உடன் பிறப்புகள் பெயர் மறப்பாய்,
தாய் தந்தையின் கைப்பிடி தளர்வதாய் உணர்வாய்!!!
அன்று மட்டும் வாழ்வை அதிகம் வெறுத்திருப்பாய்,
இன்னும் ஒருநாள் வாழத் துடித்திருப்பாய்...
மனிதா இன்று உன் இறுதி நாள்!!
ஆத்திகனா நீ நாத்திகன் ஆவாய்,
நாத்திகனா நீ ஆத்திகன் ஆவாய்.
கடவுள் அதிகமாக விமர்சிக்கப்படுவதும் அன்றுதான்...
நீ கண்ணிமைக்கும் கணங்களை எண்ணியிருப்பாய்,
உன் கண் மயிர் உதிர்வதையும் கணக்கெடுப்பாய்...
சிறு ஒசைக் கேட்டு அதிர்ந்திருப்பாய்
நித்தம் ஒரு கணம் இறந்திருப்பாய்....
மனிதா இன்று உன் இறுதி நாள்!!
இறப்பு உனக்கு இயல்புதான்
அந்த நாள் தெரியாதவரை.....
Tuesday, June 22, 2010
Wednesday, June 9, 2010
கல்லரை
நம் கல்லரையில் விழுந்த கடைசி
பூவும் நம் கதை சொல்லுமே!!
மரபணுவில் உதித்து கல்லரையில்
தானடா தஞ்சம்!!
வாழ்வில் நமக்கென்ன பஞ்சம்?
வேண்டுமடா சிந்தனையில்
சில விருச்சம்.....
உன் பிறந்த நாளில் நிறைய சிரித்தாய்
ஏனடா அழ மறுத்தாய்?
பிறந்த நாள் உன் இறந்தக் காலம்,
இறப்பு நாள் உன் எதிர்க்காலம்.
இறப்பை நோக்கியே நம் பயணம்..
அணுதினமும் வாழ்வில் சோதனைகள் ஆயிரம்,
சிரித்தால் போய்விடும்,
"வள்ளுவன்" வாக்கு பொய்க்காது,
உணர்ந்தவன் வாழ்க்கை அழியாது...
பஞ்சணையில் உறக்கம்
பெண்ணனைக்க ஏக்கம்,
என நிலைக்கெட்டு நீயும் திரியாதே!
பிறர் பழிக்க நீ வாழாதே!!!
கணக்கு ஒன்று உள்ளதே,
அது காலத்தின் கையில் இருக்குதே,
விடைப்பெறும் நேரம் வரும் போது
உன் கணக்குகள் இங்கு தீருதே!!!
உன் கல்லரையில் உதிரும் கடைசிப் பூவிதலும் உன் கதை சொல்லும்...
பூவும் நம் கதை சொல்லுமே!!
மரபணுவில் உதித்து கல்லரையில்
தானடா தஞ்சம்!!
வாழ்வில் நமக்கென்ன பஞ்சம்?
வேண்டுமடா சிந்தனையில்
சில விருச்சம்.....
உன் பிறந்த நாளில் நிறைய சிரித்தாய்
ஏனடா அழ மறுத்தாய்?
பிறந்த நாள் உன் இறந்தக் காலம்,
இறப்பு நாள் உன் எதிர்க்காலம்.
இறப்பை நோக்கியே நம் பயணம்..
அணுதினமும் வாழ்வில் சோதனைகள் ஆயிரம்,
சிரித்தால் போய்விடும்,
"வள்ளுவன்" வாக்கு பொய்க்காது,
உணர்ந்தவன் வாழ்க்கை அழியாது...
பஞ்சணையில் உறக்கம்
பெண்ணனைக்க ஏக்கம்,
என நிலைக்கெட்டு நீயும் திரியாதே!
பிறர் பழிக்க நீ வாழாதே!!!
கணக்கு ஒன்று உள்ளதே,
அது காலத்தின் கையில் இருக்குதே,
விடைப்பெறும் நேரம் வரும் போது
உன் கணக்குகள் இங்கு தீருதே!!!
உன் கல்லரையில் உதிரும் கடைசிப் பூவிதலும் உன் கதை சொல்லும்...
Subscribe to:
Posts (Atom)