Sunday, April 25, 2010

புதிய தருணம்

இன்னும் ஒரு நாள் வேண்டும், வாழ்வை ரசிக்க
இன்னும் ஒரு நாள் வேண்டும்..
இன்று எனும் வெயிலில் உறங்கி
நாளை என்ற நிழலை விளக்க வேண்டும்...
நான் மீண்டும் ஒரு முறை அன்னையின் மடியில் உறங்க வேண்டும்...
சிரித்து கொண்டு பிறக்கும் பூவைப் போல் நித்தம் துயில் களைய வேண்டும்...
மனிதன் என்ற போர்வையில் மிருகமாகிறோம்..
இன்று மிருகம் அடங்கி மனிதன் மிளிர வேண்டும்...
கண்ணில் தெளிவு, வாக்கில் சுத்தம்,
நம் நடையில் வேகம் வெளிப்பட வேண்டும்..
நாளைய உலகம் நம் வசப்பட வேண்டும்..
வானத்தில் தங்க மீன் அது விண்மீன் தானே!!!
வின்மீன் என்று குறைத்து மதிப்பிடதே நண்பா!!
ஒவ்வொன்றும் சூரியனே!!!!!