Sunday, May 16, 2010

நடிப்பு

இயல்பாய் வாழ மறந்தோம்,
நித்தம் ஒரு கணம் நடித்தோம்,
மனதில் நஞ்சை விதைத்தோம்,
தீமைகள் செய்ய துணிந்தோம்,
காலம் ஒரு நாள் மாறும்.
காலனின் அழைப்பு வரும்
அன்று உன் கல்லரையில்
சாப மாலைகள் சூடப்படும்...
இன்றே உன் மாலைகளை எடைப்போடு..

கடைசிக் காலம்

பிறக்கும் போது சிரிக்க வைத்தவன் மனிதன்...
போகும் போது சிரிக்க வைக்காதவனும் மனிதன்..

காலத்தின் கணக்கில் கேள்விக்குறியாய் பிறந்தோம்.
நேரம் வந்தபின் முற்றுப் புள்ளியாய் மறைந்தோம்..
கேள்விக்குறி வாழ்க்கைக்கு நீ தரும் பதில்,
உன் இறப்பன்று தெரியும்..சிந்தும் கண்ணிர்களே!!!

மண்ணில் நீ தஞ்சமிக்கும் போது
மக்களின் மனதிலும் தஞ்சமிக்க வேண்டும்..
விதை மண்ணில் புதைந்தாலும்,
விருட்சம் விண்ணை தொடுகிறதே!!!

மனிதா!!!
நீ செல்லும் வாழ்க்கைப் பாதையில்
வைக்கும் ஒவ்வொரு அடியும்..நிலத்தில் மட்டுமல்ல,
மனதிலும் தடம் பதிக்க வேண்டும்..

Friday, May 14, 2010

திரைபடம்

தமிழா!!!
விடிந்தால் ஆதவனையா கண்டாய்!!!
படத்தின் மிதல்லவா மோகம் கொண்டாய்!!
உறக்கத்தில் கனவில் மிதந்தாய்,
விடிந்தும் ஏனடா படக்கனவில் மிதந்தாய்...

நண்பா!!
வெள்ளி தோறும் கோவில் போன காலம் போனதே,
வெள்ளியிலும் வெள்ளித்திரை உனை சூழ்ந்ததே!!!
வன்முறை கலாச்சாரம் எங்கு கற்றாய்?
தமிழ்படத்தில் தானடா கண்டாய்...

தோழா!!!
ஆயிரம் படைகளுடன் சூழ நீ நாயகன் அல்ல...
நாயகன் மயக்கத்தில் இருந்தால் உன் வீட்டில் சோறு இல்ல...
உன் பொழுதைப் போக்கத் தான் படம்....
உன் பொழுதையே போக்க அல்ல...