Monday, October 19, 2009

<<<<<அவள்>>>>>>

இவள் கருவிழி ஆயிரம் கவி பேசும்,
அதை கவியாய் செதுக்க கம்பன் இங்கில்லை....
பசுமையின் அடையாளமாய் அவளின் சிவந்த உதடுகள்,
அங்கு எக்காலமும் சிரிப்பு என்ற பூ உதிர்கின்றதே!!!
இவளைச் சிலையாய் செதுக்க சோழர் கால சிற்பியே உயிர்பித்து வரவேண்டும்.
இவளைக் கவியாய் வடிக்க கம்பன் மீண்டும் பிறந்து வரவேண்டும்.
இவளை இலக்கியப்படுத்த வால்மிகியும் வாலியும் கூட்டுச் சேர வேண்டும்.
அன்று மேனகையின் கால்களில் விழுந்தான் விசுவாமித்திரன்
இன்று உன்னடியில் விழுந்தான் உன் "விசுவாச"மித்திரன்.

No comments:

Post a Comment