வேதியன் ஆன பரம்பொருளின் இனம்!!!
உயிரினம் வாழ வழிவகுக்கும் உணர்வு!
மேன்மை பெற்று மானுடம் கையில் சிக்கிய பொக்கிஷம்....
கண்கள் பிரசவிக்கும் வலியான குழந்தை இந்தக் காதல்....
கண்களின் கரும்பாதையில் தொடங்கி...
உன் ஒவ்வொரு அணுக்களுக்கும் விலாசம் தரும் தபால்காரன்...
கண்கள் எனும் வழியில்,
நெஞ்சுக் குழியில்,
இதயம் எனும் சமவெளியில்...
வறண்ட மனதிலும் கள்ளிப் பூவாய் பூக்குமே இக்காதல்....
மூவாறு வயதில் அழையா நண்பனவன்...
நீ தடுத்தாலும்,
எட்டி உதைத்தாலும்,
இடம் தர மறுத்தாலும்
கண்கள் எனும் திண்ணையில் ஒய்யாரமாய் கண்ணுரங்கும்...
நீ கண்ணயரும் நேரத்தில் உன் நெஞ்சில் குடிபுகுமே இக்காதல்...
நம்பிக்கையின் விருட்சம் தான் காதல்..
இன்று துளிர்த்து, நாளை மொட்டவிழ்ந்து பிறகு வதங்குவதற்கு காதல்,
பூந்தோட்டமல்ல...நம் மனதின் தூங்காநகரம்...
உன் சரிரம் மண்ணில் சரியும் பொழுதும்
கம்பிரமாய் நிற்குமடா நீ எழுப்பிய காதல் கோட்டை....
மனிதனின் செயல்கள் இருவகை..
ஒன்று வேகம் ; ஒன்று விவேகம்...
மனிதனின் வாழ்க்கையும் இருவகை..
ஒன்று களவு ; ஒன்று கற்பு...
கற்பில் வெல்ல நீ களவை வெல்ல வேண்டும்...
களவில் வெல்ல உனக்கு (வி)வேகம் வேண்டும்...
காதல் வேறு ; ஈர்ப்பு வேறு, அதை நீயரிய வேண்டும்...
கண்டறிந்த பின்னரே நீ காதல் செய்ய வேண்டும்...
உன் கைப்பற்றி,
உன் தோல்ச் சாய்ந்து,
உன் சுவாச வெப்பத்தில் குளிர்க் காயுமே உண்மைக் காதல்...
உன் எண்ணமாய் அவள்,
அவள் செயலாய் நீ...
ஆதிசிவன் அம்சமாய் மண்ணில் இக்காதல்......
No comments:
Post a Comment