உடலை ஏனோ நீ வறுத்தினாய்,
உயிரை உருக்கி சுவாசமாய் ஊட்டினாய்,
பாசமாய் தலை நீ கோதினாய்,
பசித்திட அமிர்தம் வழங்கினாய்..
விழிகளில் வழிந்திடும் துளிகளைச்
சேலை நுனியில் நீ விழக்கினாய்...
சோகம் என்னை அணைக்கையில்,
அன்னையே!!
உந்தன் மடித் தேடும் என் மனம்...
எந்தன் கடமைகள் ஆயிரம்,
என் கடன்கள் போக்க வேண்டுமே..
உணர்ந்தேன் இன்று அன்னையே!!
என் உருவே நீ தந்த வரம் தானம்மா....
உந்தன் கரம்களில் ஏந்தியே!! மண்ணைக் கண்ட மழலை நான்...
இனி உன்னைச் சுமக்க வேண்டுமே!!! நான் வாழும் காலம் மட்டுமே!!!
இது வரமாய் எனக்கு வேண்டுமே....
விழித் தூக்கம் இழந்தாய் என்னாலே...
உன் கண்கள் கசிந்ததும் என்னாலே...
இனி கலங்க வேண்டாம் என் தாயே...
உன்னைக் காப்பேன் என் சேய் போலே!!!!
No comments:
Post a Comment